பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை!.. தவெகவினர் மகிழ்ச்சி!...
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026ம் வருட சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கிது. இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி தவெக 100 தொகுதிகளிலும், அதிமுக 80 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், அன்பில் மகேஷ், ஓ.பன்னீர் செல்வம், சீமான் உள்ளிட்ட பலரும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.
பொதுவாக, கடந்த பல வருடங்களாகவே தபால் வாக்கில் திமுகதான் அதிக வாக்குகளை பெறும். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. திமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது.