1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TVK Govt's First Foreign Investment Drive: Minister Keerthana Discusses Thoothukudi Shipyard with Hyundai in South Korea

வெளிநாடு சென்ற முதல் தவெக அமைச்சர்.. தென்கொரியாவில் முக்கிய ஆலோசனை...!

தவெக அரசு
தமிழகத்தில் புதியதாக த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவர் தென்கொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
 
இது குறித்து தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான ஹூண்டாய் கனரக தொழில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எவ்வளவு சாதகமாக உள்ளது என்பது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
 
த.வெ.க அரசு பதவியேற்ற குறுகிய காலத்திலேயே தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் நனவாகும் பட்சத்தில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாப் பகுதி இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரமும் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கவனக்குறைவாக சாலையை கடந்த நபர்.. விபத்தில் ஒரு குடும்பமே சிதைந்த பரிதாபம்..!