தொடர்புடைய செய்திகள்
- ஆதரவு கவுண்ட் கூடிக்கிட்டே போகுதே!.. உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை!...
- ஆட்சிக்கு வந்துட்டோம்னு மிரட்டுறீங்களா?!.. செங்கோட்டையனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளர்கள்!..
- ஸ்டாலின்தான் எங்களுக்கு சி.எம்!... படுங்க.. பட்டு திருந்துங்க!.. கொளத்தூரில் அழுத சத்யராஜ்!...
- அண்ணாமலையை தொடர்ந்து தனி இயக்கம் துவங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு எண்ட்ரியா?..
- ரஜினி என்னை அழைத்தார்!.. ஆனால், போக முடியவில்லை!. உண்மையை உடைத்த அண்ணாமலை!..
செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்!.. விரைவில் கைது?.. அதிரடி காட்டும் விஜய்!..
2011ம் வருடம் முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து போது போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறிய பலரிடமும் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது.
மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக துறையும் விசாரணையில் இறங்கியது. இதையடுத்து, 2023ம் வருடம் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் சிறையில் இருந்தார். அதன்பின் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதன்பின் திமுகவில் இணைந்து விட்டார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியை திமுக அரசு காப்பாற்றி வந்தது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது..
ஒருபக்கம், இந்த விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதோடு, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
இதையடுத்து செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்குமாறு தமிழக அரசு ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது. முதல்வர் விஜயின் கையெழுத்தோடு கடிதம் ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே விரைவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
