1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Truth Prevails: Fake Power Outage Tweets Deleted Following TNEB Warning

ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?

மின்சார வாரியம்
சென்னையில் திட்டமிட்டு பரப்பப்படும் போலி மின்தடை புகார்களுக்கு எதிராக மின்சார வாரியம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில், சில அரசியல் உள்நோக்கம் கொண்ட நபர்கள் தங்களின் பழைய புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்களை பயன்படுத்தி, சென்னையில் கடுமையான மின்தடை நிலவுவது போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்க முயன்றனர்.
 
புதிய தவெக அரசின் மீது அவப்பெயரை உண்டாக்க துடித்த இந்த ஐடி விங் கும்பலுக்கு மின்வாரியம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. "தங்கள் பகுதியில் உண்மையாகவே மின்தடை ஏற்பட்டு இருப்பின், தங்களின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் எண்ணை  குறிப்பிட்டுப் புகார்களை பதிவு செய்யுங்கள்! அதை விடுத்து, போலி புகார்களை பரப்பி மக்களிடம் அச்சத்தையும் அரசுக்கு அவப்பெயரையும் உண்டாக்கத் துடிக்கும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என மின்வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது.
 
இந்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை அடுத்து, சமூக வலைத்தளங்களில் ஆக்ரோஷமாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 'உடன்பிறப்புகள்' மற்றும் போலி ஐடிக்கள் தங்களின் மின்தடை ட்வீட்டுகளை அவசர அவசரமாக டெலிட் செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். நுகர்வோர் எண் கேட்டவுடன் வதந்தி பரப்பியவர்களின் முகமூடி கிழிந்துள்ளதோடு, தவெக அரசின் டிஜிட்டல் விழிப்புணர்வும், மின்வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கையும் நடுநிலை மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இஸ்லாமியர்களுக்கு ஒரே ஒரு அமைச்சர்தானா?!.. இயக்குனர் அமீர் ஆதங்கம்!...