ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் திருநங்கை தேவி களம் இறங்குகிறார்!


Caston| Last Modified புதன், 6 ஏப்ரல் 2016 (18:02 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் திருநங்கையான தேவி களம் இறங்க உள்ளார்.

 
 
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தேவி பல ஆண்டுகளாக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். இவர் தாய்மதி என்ற இல்லம் ஒன்றை தொடங்கி வீடில்லாத 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
 
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் இவர், தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய தலைவர் ஜெயலலிதா நான் அவரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக நிற்கிறேன் என கூறியுள்ளார்.
 
மக்களுக்கு அரசியல் மூலம் இன்னும் வலுவாக சேவை செய்ய முடியும் என்பதால் தான் அரசியலை தேர்ந்தெடுத்ததாக கூறும் தேவி, ஏழைகளின் வாழ்க்கையில் வளர்ச்சியை கொண்டுவர பாடுபட போகிறேன். மேலும் ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு சுத்தமான குடி தண்ணீர் கொடுக்கவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க செய்யவும் பாடுபடுவேன் என கூறியுள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :