1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2015 (14:39 IST)

பசிக்கு அழுத குழந்தைக்காக ரயிலை நிறுத்திய டிரைவர் : மதுரையில் மனிதநேயம்

பசிக்கு அழும் குழந்தைக்காக ரயிலை இரண்டு நிமிடம் நிறுத்திய டிரைவரின் மனித நேயத்தை எல்லோரும் பாராட்டிய செயல் மதுரையில் நடந்துள்ளது.


 

 
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் அக்.27 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தது. அங்கிருந்து மைசூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
 
அந்நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்காக வைத்திருந்த பால் புட்டியை கீழே தவற விட்டனர். ரயிலும் புறப்பட்டு விட்டது. குழந்தையும் பசிக்கு அழ ஆரம்பித்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
 
இதை அங்கு நின்றிருந்த ஸ்டேஷன் மேலாளர் பிரேம்குமார் கவனித்தார். மேலும், உடனடியாக ரயிலை நிறுத்துமாறு டிரைவருக்கு சிக்னல் கொடுக்கச் சொல்லி அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தார். உடனே சிக்னல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அந்த ஊழியர் ஓடி டிரைவரிடம் ரயிலை நிறுத்தச் சொன்னார்.
 
டிரைவரும் இரண்டு நிமிடம் ரயிலை நிறுத்தினார். உடனே குழந்தையின் பெற்றோர்கள் கீழே விழுந்த பால் புட்டியை எடுத்துக் கொண்டனர். குழந்தையின் பசியை போக்கினர்.  அந்த மேலாளருக்கு நன்றி தெரிவித்தனர். அங்கிருந்த பொதுமக்களும் அவரை பாராட்டினர்.