டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

balu
டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!
siva| Last Updated: புதன், 14 ஏப்ரல் 2021 (15:25 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பல அரசியல்வாதிகள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சையின் பலனின்ரி பலியானார் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஸ்ரீபெரும்புதூர் எம்பியும் திமுக பொருளாளருமான டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக செய்த டிஆர் பாலு அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி இருந்ததாகவும், இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அடுத்தடுத்து அரசியல்வாதிகள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :