தொடர்புடைய செய்திகள்
- எங்க உங்கப்பாவை காணோம்.. குட்டிக்கதை மூலம் உதயநிதியை வச்சு செய்த முதல்வர் விஜய்..
- “விஜய் தலைமையில் சிறப்பான மக்களாட்சி: இன்னும் 15 வருஷத்துக்கு அவர்தான் சிஎம்!” – பத்திரிகையாளர் முத்தலீப் அதிரடி கணிப்பு
- தினமும் 500 பக்தர்கள் மட்டுமே வரும் கோவிலுக்கு எதற்கு மல்டிலெவல் கார் பார்க்கிங்? உதயநிதி கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்...
- கிடார்.. ஸ்விம்மிங்.. செஸ்.. ஹார்ஸ் ரைடிங்!.. விஜய்க்கு எல்லாம் தெரியும்!. ஷோபா சந்திரசேகர் பேட்டி...
- கிடார்.. ஸ்விம்மிங்.. செஸ்.. ஹார்ஸ் ரைடிங்!.. விஜய்க்கு எல்லாம் தெரியும்!. ஷோபா சந்திரசேகர் பேட்டி...
மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம்: சட்டமன்றத்தில் ஊழல்வாதிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் அவர்கள் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.
அரசுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பேசிய முதலமைச்சர், "மறுபடியும் சொல்றேன், இப்பவும் சொல்றேன்... பொதுமக்களோட பணத்துல இருந்து ஒரு பைசா கூட நாங்க தொட மாட்டோம், யாரையும் தொடவும் விடமாட்டோம்! இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விடமாட்டோம் என்று மிகக் காரசாரமாக எச்சரித்தார்.
மேலும், தவெக அரசு மற்றவர்களின் தயவால் நடப்பதாகக் கூறப்படும் வதந்திகளைப் போட்டுடைத்த அவர், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும், மனசாட்சி உள்ள நல்ல சக்திகளின் சப்போர்ட்டாலும் மட்டுமே இந்த ஆட்சி கம்பீரமாக நடப்பதாகக் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளிப்பது அவர்களின் சுயமாக எடுத்த முடிவு என்று விளக்கிய முதலமைச்சர், "நாங்கதான் அனுப்பி வச்சோம்" என்று திமுக நாடகமாடுவதைச் சாடினார்.
"நாங்கள் அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கதறல்?" என்று அவர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளால், திமுக உறுப்பினர்கள் பதிலே பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
Edited by Siva
