கருணாநிதியை அவமானப்படுத்த..ஸ்டாலினை சொன்னாலே போதும் - கமல்ஹாசன்

Sinoj| Last Modified திங்கள், 8 மார்ச் 2021 (23:23 IST)
 

இன்று சர்தேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், சக்கரநாற்காலி பற்றி நான் பேசியது அது கலைஞரை அவமானப்படுத்திவிட்டதாக திமுகவினர் கூறினார்கள்.

அவரை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவரை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என்று கூறினார்.

மேலும் தங்களின் தேர்தல் அறிக்கையை திமுக திருடிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன் எனத் தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :