1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC Group 4 Application Deadline Ends Tomorrow: Over 9.8 Lakh Candidates Apply for 6,574 Vacancies

டிஎன்பிஎஸ் சி குரூப் 4.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. இன்றே விண்ணப்பிக்கவும்...

TNPSC Group 4 2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கான கால அவகாசம் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.
 
கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், 10-ஆம் வகுப்பு அடிப்படைத் தகுதியைக் கொண்ட இத்தேர்வுக்குப் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் போட்டிபோட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
 
இன்னும் விண்ணப்பிக்காத தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.tnpsc.gov.in நாளை நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க உடனடியாக விண்ணப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
100 ரூபாய்க்கு 10 காய்கறிகள்.. தமிழக அரசின் வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு திட்டம்...