214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம்.. ஆர்வமுள்ள ஆன்மீகவாதிகள் விண்ணப்பிக்கலாம்...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள முக்கிய கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்தம் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
214 கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அறங்காவலர் பொறுப்புகளுக்கு தகுதியும், ஆன்மீக ஈடுபாடும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூலை 22 ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கான தகுதிகள், வயது வரம்பு, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த கோயில்களுக்குக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன போன்ற முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in என்பதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்மீகப் பணியில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.
Edited by Siva
