ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2025 (12:11 IST)

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்..  பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!
இந்தியாவின் முதல் விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசம் அவருக்கு முழு மனதுடன் அஞ்சலி செலுத்துகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக, ஆளுநர் தனது சமூக ஊடக பக்கத்தில், பூலித்தேவரை "இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்" எனப் புகழ்ந்துள்ளார். மேலும், அவர் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும், திறமையான போர் உத்தி வகுப்பாளராகவும், அஞ்சாநெஞ்சமுள்ள வீரராகவும் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அடிமைத்தனமான பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம், இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. அவரது தியாகங்களும் கொள்கைகளும், வலிமையான மற்றும் வளமான 'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்கும் நமது தேசிய உறுதிப்பாட்டிற்கு உத்வேகம் அளிக்கின்றன என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran