ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜெயலலிதாவுக்கு ராம. கோபாலன் வேண்டுகோள்

Ashok| Last Updated: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (16:00 IST)
ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கொடுத்துள்ள அறநிலையத் துறை சம்பந்தமான அறிவிக்கையில் காவடி, தீச்சடி போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரிடம் இருந்து கோவிலில் நிர்வாகம் பெறப்பட்டு வந்த கட்டணத்தை முதல்-அமைச்சரின் ஆணைப்படி ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்கிறது.

இதுபோல, ஆலய தரிசனக் கட்டணத்தையும் முதலமைச்சர் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் தரிசனம் செய்ய தகுந்த ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.கோபாலன்
கூறியுள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :