1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN CM Vijay Scheduled to Visit Kollur Mookambika Temple on June 12 to Seek Blessings

எம்ஜிஆரை அடுத்து மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல இருக்கும் தமிழக முதல்வர் விஜய். அரசியலுக்கு நடுவே ஆன்மீக பயணம்...

முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாபெரும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சி அமைத்துள்ள சி. ஜோசப் விஜய் அவர்கள் முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் தாய் மூகாம்பிகை கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். ஜூன் 12-ஆம் தேதி மதியம் சுமார் 2.30 மணியளவில் இந்த ஆன்மீக பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு பிறகு மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய பயணத்தில், தென்னிந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புனிதமான வழிபாட்டு தலங்களில் ஒன்றான மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அவர் சிறப்பு பூஜைகள் செய்து, அம்மனின் ஆசிகளை பெறவுள்ளார். இந்த ஆன்மீக தலம் தமிழக அரசியல் தலைவர்களுடன் நீண்ட கால தொடர்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த ஆலயத்திற்கு நேரில் சென்று அம்மனை தரிசித்தது மட்டுமன்றி, சுமார் 1 கிலோ எடையும், 2.5 அடி நீளமும் கொண்ட ஒரு தங்க வாளையும் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியிருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தங்க வாள், இன்றும் கொல்லூர் கோயிலில் நடைபெறும் விசேஷ பூஜைகளின் போது அம்மனின் சன்னதியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. 
 
முதலமைச்சர் விஜய்யின் இந்த திடீர் ஆன்மீகப் பயணம் தற்பொழுது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுகவில் விஜயபாஸ்கர்.. தவெகவில் ஜெயகுமார்.. அதிமுகவை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாரா ஈபிஎஸ்?