வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (23:12 IST)

தியாகி இமானுவேல் சேகரனுக்கு ஜெயலலிதா சார்பில் அஞ்சலி

தியாகி இமானுவேல் சேகரனுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில், அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
தியாகி இமானுவேல் சேகரன் 58-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலிலதா சார்பில், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.    
 

 
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை, தமிழகத்தில் உள்ள தலித் பெயரில் செயல்படும் கட்சிகளும், அரசியல் கட்சிகளும் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இதன்படி முதன்முதலாக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, டாக்டர் சுந்தர்ராஜ், அன்வர்ராஜா, எம்.பி. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரளாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட செயலாளர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பரமக்குடிமுனியசாமி, ராமநாதபுரம் ஜி.முனியசாமி, திருவாடானை ஆணிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமி,போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன், பரமக்குடி நகரசபை தலைவர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.