வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2016 (22:30 IST)

துப்பாக்கி சுடும் போட்டி தங்க பதக்கம் வென்ற தங்கம் ரித்திக்கிற்கு ரூ 4 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற  ரித்திக் என்ற மாணவனுக்கு ஊக்க தொகையை ரூ 4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து,  தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 27.12.2015 அன்று இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான 10 மீட்டர் ஓபன் சைட் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
 
இந்தப் போட்டியில், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த கேந்த்ரிய வித்யாலாய பள்ளி மாணவர் செல்வன்  ரித்திக் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். செல்வன் ரித்திக்கிற்கு, எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், செல்வன் ரித்திக்கிற்கு ஊக்கத் தொகையாக ரூ 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார்.