1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2015 (23:23 IST)

பயங்கராவதிகள் தாக்குதலில் தமிழக வீரர் அனிஷ் வீரமரணம்: அவரது குடும்பத்திற்கு அரசு ரூ 10 லட்சம் நிவாரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கராவதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் அடைந்த அனீஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணநிதி  வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  
 

 
இது குறித்து தமிழக முதலமைச்ர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம், 62 ராஷ்டிரிய ரைபில்ஸ் படைப் பிரிவில் துப்பாக்கியாளராக பணி புரிந்து வந்த, கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சித்திரம்கோடு கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் அனிஷ் ஜூலை 8ஆம் தேதி அன்று தெற்கு காஷ்மீர், ஷோபியான் மாவட்டம், பாராபக் எல்லை பகுதி அருகே தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
 
வீர மரணம் எய்திய அனிஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வீர மரணம் அடைந்த அனிஷ் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.