பிரபல நடிகருக்கு எதிரான திருப்பதி தேவஸ்தானம் புகார் ? போலீஸார் வழக்குப் பதிவு

tirupathi
sinoj| Last Modified சனி, 6 ஜூன் 2020 (23:31 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவக்குமார்,திருப்பதி தேவஸ்தானத்தில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று பேசியது போன்ற வீடியோ தொடர்பாக தமிழ் மாயன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.


தமிழ் மாயன் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருமலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :