1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Timely Intervention: 'Singapenn' Squad Rescues Young Girl Heading to Kerala to Meet Instagram Friend

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. கேரளாவுக்கு செல்ல முயன்ற இளம்பெண்ணை சரியான நேரத்தில் காப்பாற்றிய சிங்கப்பெண் படை...

இன்ஸ்டாகிராம் ஆபத்து
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களை தீவிரமாக நம்பி, ஆபத்துகளில் சிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான தனது ஆண் நண்பரை நேரில் சந்திப்பதற்காக, வீட்டை விட்டு வெளியேறி கேரளா செல்ல முயன்ற இளம் பெண் ஒருவர் சரியான நேரத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
 
சென்னையை சேர்ந்த அந்த இளம்பெண், கடந்த சில மாதங்களாக கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். அந்த நபரின் ஆசை வார்த்தைகளை நம்பிய பெண், பெற்றோரிடம் சொல்லாமல் ரகசியமாக கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். திடீரென மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் துறையில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் உடனடியாக களம் இறங்கிய ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மொபைல் சிக்னல்களை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதிரடிப்படையினரின் மின்னல் வேக நடவடிக்கையால், அந்த பெண் கேரளா எல்லையை கடப்பதற்கு முன்பாகவே, எல்லையோர ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
 
உரிய நேரத்தில் செயல்பட்டு, அந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தற்பொழுது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நாளை சட்டசபையில் என்ன செய்ய வேண்டும்? ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம்...!