மின்சார ரயில்களில் காகிதம் இல்லா டிக்கெட் முறை அறிமுகம்


K.N.Vadivel| Last Updated: சனி, 7 நவம்பர் 2015 (05:45 IST)
சென்னையில், மின்சார ரயில்களில் செல்போன் மூலம் டிக்கெட் பெறும்முறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
 
 
சென்னையில் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை முன்னிட்டு, காகிதம் இல்லா டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்ப்டுள்ளது.
 
அதன்படி, மாதந்தாேறும் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், சீசன் டிக்கெட்டை ஆண்ட்ராய்ட் செல்போன் மூலம் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று சீசன் டிக்கெட் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, வழக்கமான சீசன் டிக்கெட் விலை கொடுத்தாலே போதுமானது ஆகும். இதே போன்று நடைமேடை டிக்கெட்டுகளையும் செல்போன் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம். 
 


இதில் மேலும் படிக்கவும் :