திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 நவம்பர் 2025 (13:07 IST)

காவல்துறை வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. சிவகெங்கையில் பயங்கர விபத்து..!

காவல்துறை வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. சிவகெங்கையில் பயங்கர விபத்து..!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நடந்த சோகமான விபத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த காவல் துறை வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
 
பிரசாத் அவரது மனைவி சத்யா மற்றும் அவர்களின் 2 வயது மகன் ஆகிய மூவரும் விபத்தில் பலியாகினர். பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; சத்யாவும் குழந்தையும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மற்றொரு பயணியான சோனை ஈஸ்வரி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
விபத்தை ஏற்படுத்திய காவல் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக கூறி, உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே மறியல் கைவிடப்பட்டது.
 
 
Edited by Mahendran