தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைப்பது யார்? கருத்துகணிப்பு தகவல்

Sinoj| Last Updated: திங்கள், 18 ஜனவரி 2021 (21:12 IST)

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. எனவே அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏ.பி.பி செய்தி நிறுவனம் மற்றும் சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ஒரு தமிழகத்தில் அடுத்து திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணிக்கு 158 முதல் 166 இடங்கள் கிடைக்கும் எனவும், அதிமுக கூட்டணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

கேரளாவில் மீண்டும் பினராயில் விஜயன் தலைமயிலான இடதுசாரி முன்னணி கட்சி ஆட்சி அமைக்கும் என 81 முதல் 89 இடங்களும் காங்கிரஸ் கூட்டணி 49 முதல் 57 இடங்களும் பிடிக்கும் என எபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி ஓட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இத்தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :