அவன் அரிமா போலே.. கவிப்பெரு வேந்தரே! – ஒருவரையொருவர் புகழும் திருமா, வைரமுத்து!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:28 IST)
மனுதர்ம விவகாரத்தில் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவிதை எழுதிய வைரமுத்துவுக்கு கவிதை மூலமாகவே நன்றி தெரிவித்துள்ளார்.

மனுதர்மத்தில் பெண்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் திருமாவுக்கு ஆதரவாக கவிதை பதிவிட்ட வைரமுத்து ”திருமா தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே என்றும், திருமாவை அரிமா (சிங்கம்) என்றும் வர்ணித்து கவிதை ஒன்றை வெளியிட்டார். அதை தொடர்ந்து வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள திருமாவளவன் “நேர்மைத் திறம்வாய்ந்த நெஞ்சுரம் வலுமிகுந்த நீதிமிகு அறம்தோய்ந்த நெறிபிறழா நிறைகூற்று! கவிப்பெரு வேந்தர்வீசும் கருத்துப் போர்வாளிங்கே காக்கும் மகளிர்நலத்தை! கருக்கும் மனுவாதத்தை!” என்று கவிதை நடையிலேயே நன்றி தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :