வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2016 (17:50 IST)

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கும் நூலகங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டுமென கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கரூர் திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
 
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் மாவட்ட மைய நூலகங்கள் அனைத்திலும் உடனடியாக அரசு திருவள்ளுவர் சிலையை நிறுவி திருக்குறளுக்கு பெருமை சேர்த்த ஐயன் திருவள்ளுவர் நாள் விழாவை கொண்டாட வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்களித்த ஐயன் திருவள்ளுவர் நாள் விழாவை கொண்டாடப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் வருகின்ற நாளில் திருக்குறள் நூல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமை அறியப்படும் நேரத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டுமெனவும் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.