திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட சாப்பாட்டு ராமன்


Abimukatheesh| Last Modified புதன், 29 ஜூன் 2016 (10:34 IST)
ஆம்பூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் திருடச் சென்ற திருடன் சாவகாசமாக சமைத்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளான்.
 
 
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செலவம் என்பவர் வாணியம்பாடி பட்டு வளர்ச்சித்துறையில் பணி புரிகிறார். இவர் தனது மகனின் பொறியியல் கலந்தாய்வுக்கு நேற்று சென்னைக்கு சென்றுள்ளார். இவரது மனைவி வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடித்து விட்டு பன்னீர் செல்வத்தின் மனைவி இரவு வீடு திரும்பிய போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
 
உள்ளே சென்று பார்த்தப்போது அலமாறியில் இருந்த தங்க நகை மற்றும் ரூ:55 ஆயிரம் காணவில்லை. மேலும் சமையல் அறைக்கு சென்ற பார்த்தப்போது அங்கு பாத்திரங்களில் சாதம் மிச்சம் இருந்துள்ளது, சமையல் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. இதுகுறித்து வாணியம்பாடி காவல் நிலையத்தில புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        
 
வீட்டில் யாரும் இல்லாத்தை அறிந்தக் கொண்ட திருடர்கள், திருட வந்த வீட்டில் சாவகாசமாக சமைத்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளான்.
 


இதில் மேலும் படிக்கவும் :