வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2016 (19:01 IST)

கத்தி பட விவகாரம் : விஷாலுக்கு அரிசி மூட்டையை அனுப்பிய விவசாயிகள்

கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் திருசிவிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விவசாயிகள் நியாயம் கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு மனுவோடு அரிசி மூட்டை ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
 

 
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு.ராஜசேகர். இவர், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலோடு தாகபூமி என்ற குறும்படம் எடுத்து வெளியிட்டார்.
 
அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடுப்பில் வெளியான கத்தி திரைப்படம், தன்னுடைய தாகபூமி கதை என்று தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தாகபூமி இயக்குநர் அன்பு.ராஜசேகருக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் பல விவசாயிகள் நியாயம் கேட்டு கையெழுத்து இயக்கம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். 
 
போராட்டத்தின் அடுத்த கட்டமாக கள்ளப்பெரம்பூர் கிராமத்து விவசாயிகள் நடிகர் சங்கத்தின் மூலம் நீதி கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு தாகபூமி பற்றிய தகவல்களுடன் ஒரு மனுவும், அதோடு சொந்த வயலில் விளைந்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி ஒரு மூட்டையும சேர்த்து அனுப்புகிறார்கள்.