திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது: ஜி.ஆர்.கண்டனம்


K.N.Vadivel| Last Updated: திங்கள், 2 நவம்பர் 2015 (01:34 IST)
திருவண்ணாமலையில் , மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சியை போலீசார் ரத்து செய்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
 
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து எனது உணவு எனது உரிமை என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்.
 
இதன் ஒரு பகுதியாக மாட்டுக்கறி உணவு பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், இந்த கருத்தரங்கத்தை நடத்த திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே தலைவர்களும், தொண்டர்களும் முயன்ர போது, காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்துள்ளதாக  கூறி, நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
தமிழகத்திலும் இந்த போக்கு ஆபத்தான அறிகுறியாகும். எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :