1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (12:14 IST)

மதுபானங்களின் விலை மீண்டும் உயர்வு? - தமிழக அரசு முடிவு

மீண்டும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 10 முதல் 40 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில், வரும் நவம்பர் முதல் அதிகளவு ஆல்கஹால் உள்ள மதுபாட்டில்களுக்கு 10 முதல் 40 சதவீதம் வரையிலும், குறைந்த அளவு ஆல்கஹால் உள்ள மதுபாட்டில்களுக்கு 5 சதவீதமாகவும் விலை உயர்வு இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

 
தமிழகத்தில் உள்ள 11 மதுபான நிறுவனங்களிடமிருந்து மதுபானங்களை டாஸ்மாக் நிருவாகம் கொள்முதல் செய்து வருகிறது. மது உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட், மதுபாட்டில்கள், அட்டை பெட்டிகள் என எல்லா மூலப்பொருட்களின் விலையும் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு இருமடங்கு உயர்ந்துவிட்டது. எனவே, மதுபான கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என்று மதுபான உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இதனால், விலை உயர்விற்கு முதல்வர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக டாஸ்மாக் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில்லறை மதுபான விலையும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் உயர்த்தப்படும் எனத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.