வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: திங்கள், 21 மார்ச் 2016 (00:28 IST)

மீண்டும் அதிகார பலத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம்

மீண்டும் அதிகார பலத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம்

பல்வேறு சிக்கல்களில் இருந்து தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டுவந்துவிட்டதாகவும், அவர் மீண்டும் அதிகாரபீடத்தில் அமர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், நால்வர் அணியுடன் ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தலையை மட்டும் காணவில்லை.
 
இந்த நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் தேசிய கட்சித் தலைவர் சேம.நாராயணன், திராவிட மக்கள் காங்கிரஸ் தலைவர் குறளரசு ஜெயபாரதி போன்ற 34 கட்சிகள் மற்றும்  அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், ஓ.பன்னீர்செல்வம் மநற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட ஆறு அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்த சசந்திப்பு மூலம், பல்வேறு நெருக்கடிகள் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதில் இருந்து விடுபட்டு, மீண்டும் தனது அதிகாரபலத்திற்கு வந்துவிட்டார் என்றே அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. ஏது எப்படியோ, கடந்த ஒரு வாரமாக மர்ம கூடாராக காட்சியளித்த ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.