தமிழக அரசை குறை கூற முடியாது: கொரோனா வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து!

high court
தமிழக அரசை குறை கூற முடியாது: கொரோனா வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து!
siva| Last Updated: திங்கள், 17 மே 2021 (17:35 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழக அரசை குறை சொல்ல முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் புதிய அரசு கடந்த 7ஆம் தேதி தான் பதவி ஏற்று உள்ளது. எனவே மிக குறைந்த நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தமிழக அரசை குறை கூற முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
மேலும் ஊரடங்கில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் இதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :