1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்....முண்டியடித்த கூட்டம்

katthirikai Briyani
Sinoj| Last Modified திங்கள், 8 மார்ச் 2021 (19:03 IST)

இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் கூடியது.

மற்ற உணவுகளைவிட பிரியாணிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு, அதன் சுவைக்கும் மணத்திற்கும் உலகமே அடிமையாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உப்புக்கறி உணவகம் உழைக்கும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பிளேட் சிக்கன்
பிரியாணி 1 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தது.

இதனால் சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் அந்த ஹோட்டலில் வரிசையில் நின்றனர். பின்னர்
ஒருவருக்கு 1 டோக்டன் என்ற முறைப்படி 1 பாக்ஸ் பிரியாணி வழங்கினர்.இதில் மேலும் படிக்கவும் :