மலை விழுங்கி மகாதேவன் என்று கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.. உண்மையிலேயே திராவிடகட்சிகளை மலையை விழுங்கிவிட்டனவா?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் கூட்டுக்கொள்ளையின் கசப்பான நிஜம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தனை காலமாக மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து, தமிழ்நாட்டின் அரிய கனிம வளங்களை மிக கொடூரமாக சுரண்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
கடந்த 59 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில், அதிகார பின்னணியோடு நடைபெற்ற இத்தகைய கனிமவள சுரண்டல்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு மட்டும் பல லட்சம் கோடிகள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
பொதுமக்களுக்கு சொந்தமான இயற்கை வளங்களை சூறையாடி பெற்ற இந்த அத்தனை லட்சம் கோடிகளும் எங்கே சென்றன, யாருடைய பைகளில் தஞ்சம் புகுந்தன என்ற நியாயமான கேள்வி இன்று ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழுந்துள்ளது.
குறைந்தபட்சம் இந்த இயற்கை வளங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவோ அல்லது இங்குள்ள மக்களின் நலனுக்காகவோ பயன்படுத்தப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. தங்களின் சுயநல கொள்ளையை மூடிமறைக்க, இந்த திருடர்கள் வழக்கம் போல 'மாநில உரிமை' அல்லது 'அரசியல் பழிவாங்கல்' என்ற போலி யுக்தியை கையில் எடுத்து மக்களை ஏமாற்ற முயல்வார்கள்.
தமிழர்களாகிய நாம் விழிப்புணர்வோடு இருந்து, இவர்களின் ஏமாற்று வேலைகளை முறியடிக்கவும், நமது மண்ணின் வளங்களை மீட்டெடுக்கவும் தயாராக வேண்டும்.
Edited by Siva
