1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The Era of Mere Announcements is Over: Minister Keerthana Orders Strict Audit of All SIPCOTs in Tamil Nadu

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு ஏமாற்றும் அரசு அல்ல தவெக அரசு.. உண்மையான தொழிற்சாலைகள் அமைவதை வைத்தே மதிப்பீடு.. அமைச்சர் கீர்த்தனா

keerthana
தமிழகத்தின் தொழில் துறை சார்ந்த நிர்வாக குளறுபடிகளை சாடி, புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக அமைச்சர் கீர்த்தனா. 

அறிவிப்புகளின் காலம் முடிந்தது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள அவர், முந்தைய அரசு வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மட்டுமே வெற்றியாக காட்டி ஏமாற்றி வந்ததாகவும், இனிமேல் களத்தில் உண்மையான தொழிற்சாலைகள் அமைவதை வைத்தே வெற்றி மதிப்பிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
1,097 ஏக்கர் கொண்ட தொழிற்பூங்காவில் மனைகள் ஒதுக்கப்பட்டும் கூட, இன்னும் தொழிற்சாலைகள் தொடங்கப்படாமல் முடங்கி கிடப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 7 எம்.எல்.டி தண்ணீர் தேவைப்படும் நிலையில் மிகக் குறைந்த அளவே விநியோகம் செய்யப்படுவதாகவும், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட பூங்காவிற்கு வெறும் 5 கிலோ மீட்டர் அளவே சாலைகள் இருப்பதாகவும் உள்கட்டமைப்பு குறைபாடுகளைப் பட்டியலிட்டுள்ளார். 
 
திருச்சியில் தகுதியான சூழல் இருந்தும், கடந்த 5 ஆண்டுகளாக அதனைச் சரியாகப் பயன்படுத்தும் அரசு அமையவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர், இனிமேல் தமிழகத்தின் அனைத்து சிப்காட்களும் விரிவான தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய்யை கேலி செய்யாத ஊடகம் மிக குறைவு.. விஜய்யை இழிவுபடுத்தாத பத்திரிகையாளர்களே இல்லை.. இந்த லட்சணத்தில் எப்படி பேட்டி கொடுப்பார்?