வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 30 மே 2015 (02:24 IST)

கன்னியாகுமரியில் படகுக் கட்டணம் உயர்கிறது

கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஜூன் 1ஆம் தேதிமுதல் படகுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


 
கன்னியாகுமரியில், கடலுக்கு நடுவே, மிக அழகாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும், வானளாவிய திருவள்ளுவர் சிலையையும் உள்ளது.  தமிழகத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
 
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குகன் மற்றும் பொதிகை மற்றும் விவேகானந்தா ஆகிய மூன்று படகுகளை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இயக்கி வருகிறது.
 
 
இதுவரை இந்த படகுளில்  சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய, பெரியவர்களுக்கு ரூ.34 ம், மாணவர்களுக்கு ரூ.17 ம் வசூல் செய்யப்பட்டது. மேலும், வரிசையில் நிற்காமல் செல்ல விரும்புவர்களுக்கு என சிறப்புக் கட்டணமாக ரூ.169 வசூலிக்கப்பட்டது.
 
இந்நிலையில், மத்திய அரசு சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தியுள்ள காரணத்தினால், படகுக் கட்டணத்தையும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ஜூன் 1 ஆம் தேதிமுதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ.35 ம், மாணவர்களுக்கு ரூ.18 ம்  வசூல் செய்யப்படும். மேலும், வரிசையில் நிற்காமல் செல்ல விரும்புவர்களுக்கு என சிறப்புக் கட்டணமாக ரூ.171 உயர்த்தப்பட்டுள்ளது.