மதுக்கடையை மூடாவிடில்... உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு!

karur
anandakumar| Last Updated: திங்கள், 2 டிசம்பர் 2019 (21:40 IST)
கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மதுக்கடையை மூடக்கோரி மது பாட்டில்கள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வந்த ஊர் மக்கள் – உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததால் ஏமாற்றத்துடன் புகார் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றுனர் . விரைவில் மதுக்கடையை மூடாவிடில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவிப்பு.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பிச்சம்பட்டி செல்லும் வழியில் அரசு மதுக்கடைஅமைவதாக இருந்தது. இதனை சமூக ஆர்வலர் என்ற முறையில் அதே பகுதியை சார்ந்த அமிர்தானந்தம் என்பர் கரூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம்  இந்த பகுதியில் மதுக்கடையை அமைக்க கூடாது என்று மனு அளித்திருந்தார்.
 
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மதுக்கடையை திறக்க மாட்டோம் என அப்போது வாய்மொழி உறுதியளீத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்; கடந்த சனிக்கிழமை அன்று இரவோட இரவாக மதுபானங்களை கொண்டு வந்து டாஸ்மாக் கடையை திறந்தனர்..இதனை அறிந்த  அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் திரண்டு அங்கு அமைய இருந்த டாஸ்மாக் கடையின் முன்பு முற்றுகை போராட்டம், நடத்தி கடையை மூடுமாறு கூறியுள்ளனர்கள். இந்த தகவலை அறிந்த மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி டாஸ்மாக் அமைய உள்ள இடம் பிரச்சணைக்கு உரிய பகுதி ஆகவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வர வேண்டாம் என மாவட்ட நிவாகத்திடம் கூறப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 
 
இந்த பிரச்சணைக்குறிய இடத்தில் காவல்துரை அதிகாரிகளின் பேச்சையும் மீறி கரூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கடையை திறந்துள்ளதால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க மது பாட்டில்களோடு சமூக ஆர்வலர் அமிர்தானந்தம் மற்றும் அந்த பகுதிவாழ் மக்கள் மனு அளிக்க வந்தனர். பின்னர் உள்ளாட்சி தேர்த தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக காவல்துறையினர் மனு அளிக்க வந்த வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தேர்தல் விதி முறை காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படிருந்த புகார் பெட்டில் புகார் மனுவை ஏமாற்றத்துடன் போட்டுச்சென்றனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் சமூக ஆர்வலர் அமிர்தானந்தம் கூறுகையில்; கிருஷ்ணராயபுரத்தில் அமைய உள்ள டாஸ்மாக் கடை அருகில் தான் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆகையால் இந்த பகுதியில் பெண்களுக்கும் , பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் டாஸ்மாக் கடையை திறந்தால் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தார்.
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :