51 லட்சம் செலவு செய்து சுரங்கப்பாதை அமைத்தார்களா திமுக அரசு ? வெறும் குழியை தோண்டிவிட்டு பணம் ஸ்வாகாவா?
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த முந்தைய திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும், மக்கள் பணத்தைச் சூறையாடிய ஊழல் முறேகடுகளும் நாளுக்கு நாள் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. அதன் ஒரு பகுதியாக, தற்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சுமார் 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது முழுமையாக செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் ஆய்வு செய்து பார்த்த பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஏமாற்றமும் அதிர்ச்சியுமே மிஞ்சியுள்ளது.
அங்கே முறையான சுரங்கப்பாதையோ, அதற்கான எவ்வித உள்கட்டமைப்பு கட்டுமானங்களோ அமையவில்லை. மாறாக, வெறும் ஒரு பெரிய குழியை மட்டும் தோண்டி போட்டுவிட்டு, திட்டத்தின் மொத்த நிதியான 51 லட்சம் ரூபாயையும் திமுகவினர் அடியோடு 'ஸ்வாகா' செய்து ஏப்பம் விட்டுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே இத்தகைய போலி திட்டங்களை காகித அளவில் தீட்டி, மக்களின் கண்ணில் மண்ணை தூவியுள்ளனர். கடந்த கால திராவிட ஆட்சிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் எத்தனை ஆயிரம் கோடிகள் இப்படிப் போலி பில்கள் மூலம் திருடப்பட்டிருக்கும் என்பதற்கு இந்த 51 லட்சம் ரூபாய் குழி ஊழல் ஒரு மிகச்சிறிய சான்றாகும்.
இந்த பகற்கொள்ளையை நிகழ்த்திய ஊழல்வாதிகள் மீது தற்போதைய அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, மக்கள் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.
Edited by Siva
