அதிமுக எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பிதுரை - ஜெயலலிதா அறிவிப்பு

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: செவ்வாய், 20 மே 2014 (12:12 IST)
இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று எனது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய குழுக்களின் நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகள்:

தலைவர் – எம்.தம்பிதுரை
துணைத்தலைவர் - வி.மைத்ரேயன்

அதிமுக நாடாளுமன்ற மக்களவை குழு நிர்வாகிகள்:

தலைவர் - எம்.தம்பிதுரை
துணைத் தலைவர் – பி.வேணுகோபால்
கொறடா – பி.குமார்
பொருளாளர் – கே.என்.ராமச்சந்திரன்
செயலாளர் - ஆர்.வனரோஜா


அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு நிர்வாகிகள்:

தலைவர் – வி.மைத்ரேயன்
துணைத் தலைவர் - எஸ்.முத்துக்கருப்பன்
கொறடா – எல்.சசிகலா புஷ்பா
பொருளாளர் – ஆர்.லட்சுமணன்
செயலாளர் – டி.ரத்தினவேல்
ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முன்னதாக அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அதிமுக பொதுச்செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, பொதுச்செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :