1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tensions Flare: Rameswaram Fishermen Capture Karaikal Fishers Over Fishing Rights

காரைக்கால் மீனவர்களை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள்.. இது என்ன புதுசா இருக்குது?

ராமேஸ்வரம் மீனவர்கள்
தமிழக கடற்பரப்பில் வழக்கமாக இலங்கை கடற்படைதான் இந்திய மீனவர்களை சிறைபிடிப்பது வழக்கம். ஆனால், தற்போது ஒரு அதிரடி மாற்றமாக அண்டை மாநிலமான புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்களே சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்களிடையே மூண்டுள்ள இந்த மோதல் கடற்கரை கிராமங்களில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
 
அனுமதியின்றி பாக் ஜலசந்தி பகுதியில் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்ததே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. காரைக்கால் மீனவர்களின் இத்தகைய எல்லை மீறிய செயல்களால், தங்களுக்கு இலங்கை கடற்படையின் தொல்லை அதிகரித்து வருவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள், காரைக்கால் மீனவர்கள் 9 பேரை அவர்களது படகுடன் சிறைபிடித்துக் கரைக்கு கொண்டு வந்தனர்.
 
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். எல்லையை மீறி மீன்பிடிப்பது இரு மாநில மீனவர்களிடையே மோதலைல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அஜித் குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நிகிதா நேரில் ஆஜராக உத்தரவு..!