காயிதே மில்லத் பிறந்தநாள்.. ஒரே நேரத்தில் வந்த திமுக மற்றும் காங்கிரஸ்.. செல்வப்பெருந்தகைக்கு திமுகவினர் எதிர்ப்பு..
சென்னையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்த ஒரே நேரத்தில் வந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக கூட்டணிக் கட்சிகளாக இருந்த திமுக, காங்கிரஸ் தற்போது எதிரெதிர் துருவாக உள்ளது. இந்த நிலையில் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த திமுகவினர் திடீரெனக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
செல்வப்பெருந்தகைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய திமுக தொண்டர்கள், அவரை நினைவிடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்த முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களமாக மாறியது.
தலைவர்கள் முன்னிலையிலேயே கூட்டணிக் கட்சியினர் இவ்வாறு மோதிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த பொதுமக்களையும் நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அங்கிருந்த மூத்த தலைவர்களும் காவல்துறையினரும் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், காயிதே மில்லத் நினைவிடத்தில் அரங்கேறிய இந்த மோதல் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
