வகுப்பறையில் விஜய் படத்தை ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

Last Modified செவ்வாய், 22 அக்டோபர் 2019 (20:24 IST)
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கரும்பலகையை நீக்கப்பட்டு கணினி திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

அந்த வகையில் ஸ்மார்ட் வகுப்புகளில் கணினி திரையின் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை எளிதில் வீடியோக்கள் மூலம் ஆசிரியர்கள் தீர்த்து வருகிறார்கள். இதனை அடுத்து மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்து வருவதாகவும் ஸ்மார்ட் வகுப்புகள் மாணவர்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கணினி வகுப்பறையில் மாணவர்களுக்கு விஜய் நடித்த திரைப்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்தாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் விசாரணை நடத்திய கல்வி அலுவலர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விஜய் நடித்த நண்பன் படத்தை போட்டு காட்டி இருப்பது தெரியவந்தது

இதனை அடுத்து அந்த படத்தை போட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விஜய் நடித்த படம் ஒன்றை ஒளிபரப்பியதால் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :