’’காதலிக்க மாட்டாயா....?? ஒருதலைக்காதலில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் ....

Hotel servant arrested for Child porn video upload
Sinoj| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (21:36 IST)
 
கோப்புப்படம்

 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேரசிரியர் ஒருவர் ஒருதலைக்காதலால் ஒரு மாணவியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.  இங்கு சிந்தாமணி பகுதியில் வசித்துவரும் நாகராஜன் என்பவரின் மகள்( 18 வயது)  தோட்டக்கலை முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

இவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கிப் படித்துவந்த நிலையில் நேற்று மாலை ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக விடுதிக்கு வெளியே வந்திருக்கிறார்.

அப்போது அவரை நெருங்கிய ஒரு இளைஞர் அவரை திட்டி என்னைக் காதலிக்க மாட்டாயா என்று கூறி  பேனாக் கத்தி கொண்டு அப்பெண்ணின் கழுத்து மற்றும்கையில் கிழித்துள்ளார்.

பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸர் விசாரித்து வந்தனர்.

அதில், மாணவியைக் கத்தியால் குத்தியவர் சேவியர்(30) இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது,   அப்பளியில் அந்த மாணவியை படித்திருக்கிறார். அந்தப்பழக்கத்தில் என்னைக் காதலிக்க மாட்டாயா என்று கேட்டி கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சேவியர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :