செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (01:37 IST)

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திடீர் கைது

தமிழீழ மக்களை அடைத்து சித்ரவதை செய்யும் அகதிகள் முகாம்களை இழுத்து மூடக் கூறி, திருச்சி மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 750 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
தமிழக சிறைகளில் உள்ள சிறப்பு முகாமிகளில் அடைக்கப்பட்டுள்ள, ஈழ தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்றும்  வலியுறுத்தி, திருச்சி மத்திய சிறைச்சாலை முன்பு முற்றுகை போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
 
அப்போது, போராட்டம் நடத்தியவர்களை  திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, வேல்முருகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் காவேரி 750 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். பின்பு, மாலையில் வேல்முருகன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
 
இந்த முற்றுகை போராட்டம் காரணமாக  திருச்சி - புதுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.