1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (15:18 IST)

சுவாதி கொலை விவகாரம்: வழக்கறிஞர் ராமராஜுக்கு தமிழச்சி கேள்வி

சுவாதி கொலை விவகாரம்: வழக்கறிஞர் ராமராஜுக்கு தமிழச்சி கேள்வி

சமூக வலைதளத்தில் மிகவும் துடிப்பாக, பெண்ணியம், மனித உரிமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசும் தமிழச்சி சுவாதி கொலை தொடர்பாக தனது கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தனது பதிவில், சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளி ராம்குமார் இல்லை எனவும், கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின் தந்தை அவரின் உண்மையான தந்தை இல்லை என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.



 

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ், தமிழச்சி கூறியதற்கு, சுவாதி குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ராமராஜூக்கு பதிலளிக்கும் வலையில் தமிழச்சி சில கருத்துக்கலை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் "தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்த வேண்டும்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிட்டிருப்பதை வரவேற்கிறேன். அவ்வாறான நகர்வுகளை தமிழக காவல்துறை முன்னெடுப்பின் முழு ஒத்துழைப்பையும் ஆதாரங்களையும் தருவதற்கு தயார்.

அதே சமயம் என் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கறிஞர் ராம்ராஜ், 'பிரதமருக்கு நெருக்கமான ராம்கி கருத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை?

இதற்கும் முன்வருவாரானால் தற்போதைய எனது ஆதரங்களுடான இந்த பதிவை ஸ்கிரீன் சாட் எடுத்து நீதித்துறையிடமும் பத்திரிகையிடமும் பேச வேண்டும். அதற்கு வழக்கறிஞர் ராமராஜ் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.