ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (16:07 IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

assembly

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிலவி வரும் நிலையில் இரு நாடுகளிலும் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த வாரம் போர் தொடங்கிய நிலையில் தினம்தோறும் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசித் தாக்கிக் கொள்வதும், விமானங்கள் மூலமாக தாக்குவதுமாக இருப்பது மத்திய தரைக்கடலையே பரபரப்பாக்கியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையேயான இந்த போரால் இரு நாடுகளின் வான் எல்லையும் மூடப்பட்டுள்ளது. இடையே உள்ள துருக்கி உள்ளிட்ட நாடுகளின் வான் எல்லையும் மூடப்பட்டதால் சர்வதேச விமானங்கள் அப்பகுதியில் பயணிக்க முடியாத சூழல் உள்ளது.

 

உலக நாடுகளை சேர்ந்த பலர் ஈரான் - இஸ்ரேல் நாடுகளில் உள்ள நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அவ்வாறாக இரு நாடுகளிலும் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

இதற்காக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவிகளுக்கு 011 24193300 என்ற லேண்ட்லைன் எண் மற்றும் 9289516712 என்ற வாட்ஸப் இணைப்பு உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K