என்ன.. பாஸ் ஆகலையா?- தனித்தேர்வு முடிவுகளால் மாணவர்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick| Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (15:25 IST)
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் டுடோரியல் மூலமாக எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடந்தது.

இந்நிலையில் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் மாணவர்கள் எழுதிய நிலையில் வெறும் 8 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 40 ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்ற 12ம் வகுப்பு தனித்தேர்விலும் 12% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :