உஷ்.... அப்பாடா தேர்தல் களத்தில் குதித்த காங்கிரஸ்

உஷ்.... அப்பாடா தேர்தல் களத்தில் குதித்த காங்கிரஸ்


K.N.Vadivel| Last Modified ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (23:13 IST)
மிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலுக்கு  விருப்பமனு வாங்கும் தேதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுவை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை பெற ரூ.100 செலுத்த வேண்டும். சட்டமன்ற பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.5000, பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில், ஏற்கனவே, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் விருப்பமனு வாங்கும் படலம் நடைபெற்றுவருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :