வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (21:07 IST)

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி சோனியாவுக்கு தமிழிசை கடிதம்!

பிரதமர் மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் விமர்சித்துப் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இளங்கோவன் அவதூறாகப் பேசியதாக கூறி அவரது உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், பிரதமர் மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசிய இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
தனிநபர் மட்டுமின்றி நாட்டையே அவமதிக்கும் வகையில் இளங்கோவன் பேசியிருப்பதாக தமிழிசை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.