வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 14 ஜனவரி 2016 (13:23 IST)

பொங்கல் வாழ்த்து தேவையில்லை: பிரதமரின் வாழ்த்தை நிராகரிக்கும் தமிழர்கள்

நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என தனது வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததாலும், அவசர சட்டம் மத்திய அரசால் பிறப்பிக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டதாலும், தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் டிவிட்டர் பொங்கல் வாழ்த்தை இணையவாசிகள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
 
எங்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக மாற்ற வேண்டாம். ஏற்கனவே நாங்கள் பல சிறந்த நடிகர்களை தமிழ் நாட்டில் பார்த்திருக்கிறோம். முதலில் ஜல்லிக்கட்டுக்கு வழிவகை செய்துவிட்டு பின்னர் வாழ்த்து சொல்லுங்கள் என ஒரு தமிழ் ஜல்லிக்கட்டு ஆதரவாளர் கூறியுள்ளார்.


 
மேலும் ஒருவர் உங்களின் பொங்கல் வாழ்த்துக்கள், எங்களுக்கு கசப்பான ஒன்று, நாங்கள் கேட்டதை செய்ய முடியாத நீங்கள், வாழ்த்து சொல்ல தேவையில்லை என பதிவிட்டுள்ளார்.

 
 
மேலும் பல தமிழ் இணையவாசிகள் பிரதமரின் பொங்கல் வாழ்த்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தவாறே உள்ளனர்.