தொடர்புடைய செய்திகள்
- த்ரிஷாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம்.. முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார்...
- மது இல்லாத நகராட்சியாக மாறிய அரக்கோணம்... பல ஆண்டுகளுக்கு பின் பொதுமக்கள் நிம்மதி..
- தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கேட்ட 2 கேள்விகள்.. விஜய்யிடம் இருந்து என்ன பதில்?
- தவெக அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற மாட்டோம்: மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி...
- பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறதா? புதிய இடத்தை தேடும் தமிழக அரசு!
15 தவெக எம்.எல்.ஏக்களை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வைக்க முயற்சி.. முறியடித்த உளவுத்துறை...
தமிழக வெற்றிக் கழக அரசின் 15 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியை கவிழ்க்க முயன்ற சதி திட்டத்தை தமிழ்நாடு உளவுத்துறை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதன் முதற்கட்டமாக, ஐபிடிஎஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் போது, இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் கரூர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் மேலும் இரண்டு பேரை அதிகாரிகள் தற்பொழுது கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கைதானவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் முழு நெட்வொர்க் மற்றும் இதன் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து உளவுத்துறையினர் தங்களது விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர்.
Edited by Siva
