சலங்கை நாதம் கலைவிழா: கவர்னர் ரோசய்யா தொடங்கி வைக்கிறார்


K.N.Vadivel| Last Modified ஞாயிறு, 3 ஜனவரி 2016 (22:28 IST)
தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் கலைவிழாவை தமிழக கவர்னர் ரோசய்யை தொடங்கிவைக்கிறார்.
 
 
இது குறித்து, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  கூறியுள்ளதாவது:-
 
தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் சலங்கைநாதம் கலைவிழா வரும் 9 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில், கலை நிகழ்ச்சி, கிராமிய நடனம், பழங்குடியினர் நடனம், செவ்வியல் நடனம் மற்றும் நாடகங்கள் நடைபெற உள்ளது.
 
இந்த விழாவை தமிழக கவர்னரும், தென்னகப் பண்பாட்டு மையத்தின் தலைவருமான ரோசய்யா தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :